காவிரி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு திமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மைக் குழு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வரின் இந்த பேச்சு உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தண்ணீர் திறப்பது தொடர்பாக கர்நாடக அரசு பேசவோ, அழுத்தம் கொடுக்கவோ திமுக அரசு முன்வரவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசின் மவுனம் விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும்.

மேலும் அந்த அறிக்கையில், தமிழக முதல்வர் உடனடியாக கர்நாடக முதல்வரிடம் பேசி காவிரி முறைப்படுத்தும் குழுவின் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

Facebook Comments Box