காமராஜரின் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 122வது பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, காமராஜர் எளிமைக்கு உதாரணம் என்றும், “தமிழ்நாட்டின் கல்வித்தரம் உயர்ந்ததற்கு காமராஜரின் ஆட்சிதான் காரணம்” என்றும் பாராட்டினார்.

மேலும், “காமராஜர் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்து சரண மக்களின் அன்பைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார்” என்றும் ஆளுநர் கூறினார். தமிழகத்தில் பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கு காமராஜரின் ஆட்சியே காரணம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.

Facebook Comments Box