திருச்சி அருகே உள்ள ஏற்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டியுள்ளார். மேலும், தினமும் தவறாமல் இந்த கோவிலுக்கு சிறப்பு வழிபாடு செய்து வருகிறார். பிரதமர் மோடியின் திட்டங்களால் பயனடைந்ததாகவும், அதனால் தான் கோவில் கட்டியதாகவும் விவசாயி கூறினார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி தற்போது மூன்றாவது முறையாக பிரதமராக உள்ளார்.
கோவில்: இதனிடையே, திருச்சி மாவட்டம் ஏற்குடி கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு விவசாயி ஒருவர் கோவில் கட்டியுள்ளார். 50 வயது விவசாயி பி.சங்கர் தனது சொந்த செலவில் தனது தோட்டத்தில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டியுள்ளார். மேலும், இந்த கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்.
இந்த கோவிலில் பிரதமர் மோடியின் சிலையை வைத்துள்ளார். மோடிக்கு சிலை மட்டுமின்றி பல்வேறு புகைப்படங்களும் உள்ளன. அதில் கடவுள் படங்களும், மேலே மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜ், எம்ஜிஆர், ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும், அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் படமும் இடம் பெற்றுள்ளது.
காரணம்: பிரதமர் மோடியின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி போன்ற நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டதாகவும், இதன் காரணமாக மோடிக்கு கோவில் கட்ட முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 1.2 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இக்கோயிலில் 8 x 8 அடி ஓடுகள் வேயப்பட்ட கூரை உள்ளது. பிரதமர் மோடியின் மார்பளவு சிலை உள்ளது, மேலும் இந்த சிலைக்கு தினமும் அவர் இருபுறமும் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்கிறார்.
இந்த சங்கர் கடந்த சில வருடங்களாக துபாயில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு தமிழகம் திரும்பி விவசாயம் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் பிரதமர் மோடியின் திட்டங்கள் விவசாயிகளுக்கு நல்ல பலனைத் தருகிறது என்பதை உணர்ந்தேன் என்று கூறும் ஷங்கர், தனது வருமானமும் அதிகரித்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
விவசாயிகளின் கருத்து: அவர் மேலும் கூறியதாவது: விவசாயிகளுக்கான ரூ.2,000 (பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி) திட்டம், உஜ்வாலா யோஜனா, வீட்டுக்கு ஒரு கழிப்பறை போன்ற திட்டங்களால் நான் பயனடைந்துள்ளேன். அதேபோல், மோடியின் திட்டங்களால் பலன் அடைந்ததால், பிரதமருக்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளார்.
2019 இறுதியில் இந்த கோவிலை திறந்து வைத்தார்.அன்றிலிருந்து இன்று வரை ஒரு நாள் கூட தவறாமல் இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.