சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மாநகராட்சி விரிவாக்கம் உள்ளிட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துதல், சென்னை மாநகர காவல் சட்டத்தை மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு நீட்டித்தல் உள்ளிட்ட மசோதாக்கள் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து, தமிழக அரசிதழில் இந்த திருத்தங்கள் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளன.

Facebook Comments Box