பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, கட்சியின் புதிய மாநிலத் தலைவராக பி.ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். 2009 மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆனந்தன் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2006 ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்ட்ராங்குடன் இணைந்து பணியாற்றி வரும் ஆனந்தன், தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனந்தன் ஆம்ஸ்ட்ராங் மீதான வழக்குகளில் ஆஜராகி அனைத்து வழக்குகளில் இருந்தும் அவரை விடுவித்தார்.

Facebook Comments Box