ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் சான்றிதழ் படிப்பை மேற்கொள்வதற்காக நேற்று இரவு லண்டன் புறப்பட்டார். மூன்று மாத படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை, நவம்பர் மாதம் இந்தியா திரும்புகிறார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலைக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பா.ஜ., நிர்வாகிகள் அண்ணாமலைக்கு மலர் கொத்து வழங்கி, வாழ்த்து தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அண்ணாமலை கட்சிப் பணிகளை மூன்று மாதங்களுக்கு ஆன்லைனில் கண்காணிப்பார் என்று பாஜக தலைமை அறிவித்துள்ள நிலையில், அவரது லண்டன் பயணத்தை வெற்றியடையச் செய்ய பாஜக சமூக வலைதளங்களில் அண்ணாமலை என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தது.

Facebook Comments Box