நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ செயற்கைக்கோள்: முக்கிய அம்சங்கள்!

நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ செயற்கைக்கோள்: முக்கிய அம்சங்கள்!

இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா ஆகியவை கூட்டு முயற்சியாக உருவாக்கியுள்ள ‘நிசார்’ செயற்கைக்கோளின் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.

புவியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கும் நோக்குடன், இஸ்ரோ-நாசா இணைந்து இந்த செயற்கைக்கோளை விண்வெளிக்குச் செல்வதற்கான திட்டத்தை வகுத்துள்ளன.

மொத்தம் ₹12,750 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள ‘நிசார்’ செயற்கைக்கோள், ஜூலை 30 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த செயற்கைக்கோளில், இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து இணைத்துள்ள இரண்டு உயர் தொழில்நுட்ப ரேடார் அமைப்புகள் உள்ளன. இவை பூமியின் மேற்பரப்பை மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் படம் பிடித்து தரவுகள் அனுப்பும் திறனுடையவை என தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு 12 நாட்களுக்கும் ஒருமுறை, நிசார் செயற்கைக்கோள் பூமியின் முழு பரப்பையும் நுண்ணிய ரீதியில் படம் பிடித்து அனுப்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பாறைகள் உருகும் நிலை, நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் ஆகியவற்றை இது முன்னே கணிக்கவல்லது.

அத்துடன், வனவளங்கள், விவசாயப் பரப்புகளில் நிகழும் மாற்றங்கள், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை பற்றி நிசார் செயற்கைக்கோள் ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் இயற்கை நிலைமாற்றங்களை ஆராய்வதே நிசார் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Low Earth Orbit எனப்படும் தாழ்வான பூமி வளையத்தில், சூரிய ஒத்திசைவு பாதையில், பூமியிலிருந்து 747 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள், சுமார் 5 ஆண்டுகள் ஆராய்ச்சி பணியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box