மணிக்கு 620 கி.மீ. வேகம் கொண்ட “மிதக்கும் ரயில்”: விமான வேகத்தையும் கடந்துசெலும் சீனாவின் சாதனை!

மணிக்கு 620 கி.மீ. வேகம் கொண்ட “மிதக்கும் ரயில்”: விமான வேகத்தையும் கடந்துசெலும் சீனாவின் சாதனை!

உலகத்தில் அதிவேக ரயிலுக்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருப்பது சீனாதான். காந்த ஈர்ப்பு விசையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த ரயில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவை போன்ற முன்னணி நாடுகளுக்கும் நேரடி போட்டியாக அமைய உள்ளது.

வெயிலாக 620 கிலோமீட்டரை மணிநேரத்தில் கடக்கக்கூடிய திறன்… வெறும் 7 நிமிடங்களில் இவ்வேகத்தை எட்டக்கூடிய சக்தி… விமானங்களைவீட்டி ஓடக்கூடிய இந்த அதிவேக ரயிலை உலகறிய சீனா தயாராகி வருகிறது.

MAGLEV என அழைக்கப்படும் இந்த ரயில், வியக்க வைக்கும் வேகத்தோடு மட்டுமல்லாமல், குறைந்த சத்தம், பயணத்தில் தடையில்லாத சீரான அனுபவம் ஆகியவற்றை வழங்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வழமையான சக்கரங்களுக்கும் தண்டவாளங்களுக்கும் இடையிலான உராய்வை தவிர்க்கும் வகையில், காந்த இழுப்பு விசை (Magnetic Levitation) தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஒரு சுரங்க பாதையில் நடைபெற்ற MAGLEV ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த கட்ட வளர்ச்சி பணிகளை சீனா தொடங்கியுள்ளது.

தற்போது உலகின் பல பகுதிகளில் புல்லட் ரயில்கள் மணிக்கு சுமார் 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. ஆனால், சீனாவின் ஷாங்காய் MAGLEV ரயில் ஏற்கனவே 431 கி.மீ. வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது அதைவும் மிஞ்சி, உலகிலேயே வேகமான ரயிலாக புதிய MAGLEV ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா.

இரக்குபவரின்றி இயங்கும் இந்த தானியங்கித் தொழில்நுட்ப ரயில், தரையில் பயணித்தாலும், விமானத்தில் பறப்பது போல உணர்வை பயணிகளுக்கு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Facebook Comments Box