ரஃபேல், F-35ஐ விட மேம்பட்டது: தேஜாஸ் MK1A போர் விமானம் – ரூ.60,000 கோடிக்கான ஒப்பந்த நடவடிக்கைகள் தீவிரம்

ரஃபேல், F-35ஐ விட மேம்பட்டது: தேஜாஸ் MK1A போர் விமானம் – ரூ.60,000 கோடிக்கான ஒப்பந்த நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமானப்படையின் பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் நோக்கத்தில், ரஃபேல் மற்றும் F-35 போர் விமானங்களை விட குறைந்த செலவில் அதிக செயல்திறன் கொண்ட உள்நாட்டுப் தயாரிப்பு தேஜாஸ் MK1A போர் விமானங்களை ரூ.60,000 கோடி மதிப்பில் வாங்கும் பணியில் பாதுகாப்பு அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது, “ஆத்மநிர்பர் பாரத்” திட்டத்தின் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூரி’ பின், சீனா மற்றும் பாகிஸ்தானின் நிலைமைகளை எதிர்கொள்ளும் வகையில், இந்தியா தனது ராணுவ உபகரணங்கள் மற்றும் போர் விமானங்களை புதுப்பித்து வருகிறது. இந்நிலையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் தேஜாஸ் இலகுரக போர் விமானம், புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் MK1A என்கிற வடிவத்தில் உருவாகியுள்ளது.

இந்த புதிய தேஜாஸ் MK1A விமானத்தில், மேம்பட்ட எலெக்ட்ரானிக் ரேடார், தகவல் பரிமாற்ற அமைப்புகள், அதிகப்படியான தாக்குதல் திறன் மற்றும் பராமரிப்பில் எளிமையான வசதிகள் உள்ளன.

4.5வது தலைமுறை போர் விமானமான MK1A, பலவகை சூப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏற்றுக்கொள்பவை. இதில் BrahMos குரூஸ், Astra Mk-2 ஆகிய ஏவுகணைகள் இணைக்கப்பட முடியும். இதன்மூலம், இந்திய எல்லையில் இருந்தபடியே 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்க முடியும்.

வானிலும் நிலத்திலும் ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்ட தேஜாஸ் MK1A விமானங்களை இந்திய விமானப்படையில் சேர்ப்பதற்கான திட்டம் தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், 97 விமானங்களை ரூ.60 ஆயிரம் கோடிக்கு வாங்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில், ஒவ்வொன்றுக்கும் ரூ.2,194 கோடி செலவாகிறது. மொத்தமாக 78,998 கோடிக்கு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

அதேபோல், பிரிட்டனின் 5வது தலைமுறை போர் விமானமான F-35 ஒருங்கிணைந்த போர் விமானத்தின் மதிப்பு சுமார் ரூ.942 கோடி என கணிக்கப்படுகிறது.

மாறாக, தேஜாஸ் MK1A விமானம் ஒன்றின் மதிப்பு ரூ.618 கோடி மட்டுமே. இதனால், ரஃபேல் மற்றும் F-35 விமானங்களை விடக் குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையில் தேஜாஸ் விமானங்களை இந்தியா பெற முடியும்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், 2031க்குள் 97 MK1A விமானங்களை வழங்க HAL நிறுவனம் உறுதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box