தரை மற்றும் கடலுக்கடியில் பயன்படும் கண்ணிவெடி சோதனை வெற்றிகரமாக முடிந்தது!

தரை மற்றும் கடலுக்கடியில் பயன்படும் கண்ணிவெடி சோதனை வெற்றிகரமாக முடிந்தது!

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான DRDO மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து, தரையும் கடலுக்கடியுமாக செயல்படக்கூடிய புதிய வகை கண்ணிவெடியை வெற்றிகரமாக சோதித்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அளிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த புதிய உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட கண்ணிவெடி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தச் சோதனைக்குப் பயன்படுத்தப்பட்ட கண்ணிவெடி ‘MIGM’ எனப்படும் வகையைச் சேர்ந்தது. இது முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. இந்தக் கருவியின் சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த சாதனையின் மூலம், இந்தியக் கடற்படையின் கடலுக்கடிப் போர் திறன்கள் மேலும் உயரக்கூடிய நிலையை எட்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box