கையடக்க ஏசியை உருவாக்கிய கலிஃபோர்னியா பொறியாளர்கள்!
கையடக்கக் கணினி பற்றி அனைவரும் கேட்டிருப்போம். ஆனால் கையடக்க ஏசி பற்றி கேட்டிருக்கிறோமா?… அதையே அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கடும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து தப்பிக்க ஏர் கண்டிஷனர் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எனினும், ஏசியை பயன்படுத்தும் போது மின்சாரம் அதிகம் செலவாகிறது. இதற்கு தீர்வாகவே கலிஃபோர்னியா பொறியாளர்கள் கையடக்க ஏசியை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த ஏசி, மின்சாரச் செலவை குறைப்பதோடு மட்டுமல்லாமல், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடிய வசதியையும் வழங்குகிறது. சிறிய மியூசிக் பிளேயரைப் போல் தோற்றமளிக்கும் இந்த கையடக்க ஏசி, மின் சாதன சந்தையில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.