இந்தியாவின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிாைநிறுத்திய ஸ்பேஸ் எக்ஸ் சாதனை

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்தியாவின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி சாதனை உருவாக்கியுள்ளது.

ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் புவிவட்டப்பாதையில் செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது. பெங்களூரு பிஸ்சல் நிறுவனத்தின் மற்றும் ஹைதராபாத் துருவா நிறுவனத்தின் செயற்கைகோள்கள் இதற்காக விண்ணில் செலுத்தப்பட்டன.

விண்ணில் சீறி சென்ற ஃபால்கான் 9 ராக்கெட், இரு செயற்கைகோள்களையும் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

தனியார் நிறுவனங்கள் விண்வெளித் துறையில் பங்களிப்பதை மத்திய அரசு ஊக்குவித்து வருகின்ற நிலையில், இது முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு செயற்கைகோள்கள் பூமியின் மேற்பரப்பை ஆய்வு செய்ய, காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற விடயங்களில் உதவும் என்று நம்பப்படுகிறது.

Facebook Comments Box