ரபேல், F-35-ஐ விட மேம்பட்டது: தேஜாஸ் MK1A போர் விமானம் – ₹60,000 கோடிக்கு புதிய ஒப்பந்தம்!

ரபேல், F-35-ஐ விட மேம்பட்டது: தேஜாஸ் MK1A போர் விமானம் – ₹60,000 கோடிக்கு புதிய ஒப்பந்தம்!

இந்திய விமானப்படையின் சக்தியை பலப்படுத்தும் நோக்கத்தில், ரபேல் மற்றும் F-35 போர் விமானங்களைவிட அதிக திறன் கொண்டதுடன் விலை மலிவாக உள்ள தேஜாஸ் MK1A உள்நாட்டுத் தயாரிப்புப் போர் விமானங்களை வாங்கும் பணிகளில் பாதுகாப்பு அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. ₹60,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் முக்கிய வெற்றிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

பின்னணியில் உள்ள மாறுதல்கள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா தன்னுடைய ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமானங்களை அதிநவீனமாக மாற்றி வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தேஜாஸ் விமானம் பல மேம்பாடுகளுடன் MK1A எனும் புதிய வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேஜாஸ் MK1A-வின் சிறப்பம்சங்கள்

உலகத் தரத்தில் தயாரிக்கப்படும் தேஜாஸ் MK1A விமானங்களில்:

  • மேம்பட்ட எலக்ட்ரானிக் ரேடார்
  • நவீன தகவல் தொடர்பு உபகரணங்கள்
  • அதிக தாக்குதல் திறன்
  • பராமரிக்க எளிதான வடிவமைப்பு

போன்ற அம்சங்கள் உள்ளன. இது 4.5ம் தலைமுறை போர் விமானம் என்ற வகையில் பலவகை சூப்பர் சோனிக் ஏவுகணைகளை ஏற்று செயல்படவல்லது. அதில் BrahMos கிரூஸ் ஏவுகணையும் Astra Mk-2 ஏவுகணையும் பொருத்தப்படக்கூடியவை. இதன் மூலம் 500 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளையும் இலக்குவழி மற்றும் தரைவழி தாக்குதல்களையும் ஒரே நேரத்தில் நடத்த முடியும்.

முடிவடைந்த ஒப்பந்த விவரங்கள்

இந்திய விமானப்படைக்கு 97 தேஜாஸ் MK1A விமானங்களை வாங்கும் திட்டம் ₹60,000 கோடி மதிப்பில் வகுக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால் 2031ற்குள் அனைத்து விமானங்களும் வழங்கப்படும் என HAL தெரிவித்துள்ளது.

விலை ஒப்பீடு: தேஜாஸ் MK1A vs ரபேல் vs F-35

  • ரபேல் (பிரான்ஸ்): 36 விமானங்கள் – ₹78,998 கோடி (ஒவ்வொன்றும் ₹2,194 கோடி)
  • F-35 (பிரிட்டன்/அமெரிக்கா): ஒவ்வொன்றுக்கு ₹942 கோடி
  • தேஜாஸ் MK1A (இந்தியா): ஒவ்வொன்றுக்கு ₹618 கோடி

இதன்மூலம், இந்தியா குறைந்த செலவில் கூடுதல் அளவிலான நவீன போர் விமானங்களைப் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. சுயசார்பு நோக்கில் இது ஒரு பெரிய முன்னேற்றமாகவும், எதிரிகளுக்கு ஒரு தெளிவான செய்தியாகவும் அமைந்துள்ளது.

Facebook Comments Box