ஏவுகணை மூலம் இலக்குகளை அழிக்கும் பங்கர் பஸ்டர் வகை குண்டு
அமெரிக்காவின் GBU-57 பங்கர் பஸ்டர் போல, அடுக்கு நிலங்களில் பதுங்கிய இலக்குகளை அழிக்கும் சக்திவாய்ந்த குண்டுகளை இந்தியா உருவாக்கி வருகிறது. உலகளாவிய ரீதியில் ஒரு வலிமையான பாதுகாப்பு சக்தியாக இந்தியா மாறி வருவதற்கான சான்றாக இத்திட்டம் கருதப்படுகிறது. இதைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு இங்கே:
கடந்த வாரம், ஈரானின் FORDOW அணுஆயுத நிலையத்தை அமெரிக்கா பங்கர் பஸ்டர் குண்டுகளால் தாக்கியது. இதேபோல், நிலத்தின் அடியில் உள்ள இலக்குகளை தொட்டுசெல்லும் ஆற்றல் மிக்க ஏவுகணைகளை இந்தியா உருவாக்கி, எதிர்கால மோதல்களுக்கு முன்னோட்டமாக தயாராகி வருகிறது.
பொதுவாக கண்டங்கள் தாண்டிச் செல்லக்கூடிய அக்னி-5 ஏவுகணையின் மேம்பட்ட பதிப்பை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கி வருகிறது. அக்னி-1 ஏவுகணை 700 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. அக்னி-2 க்கான தாக்கும் தூரம் 2000 கி.மீ. ஆகும். அக்னி-3 க்கு 2500 கி.மீ., அக்னி-4 க்கு 3500 கி.மீ., மற்றும் அக்னி-5 ஏவுகணை அணுஆயுதங்களை சுமந்து கண்டங்களை தாண்டிச் சென்று தாக்கும் திறன் கொண்டது.
அக்னி-5 ஏவுகணை ஒரு டன் எடையுள்ள அணுஆயுதத்தை சுமந்து, எந்த புவிப் பகுதியிலிருந்தும் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சீன எல்லை முதல் மேற்குத் திசையில் ஐரோப்பிய நாடுகள் வரையிலான எல்லைக்குள் உள்ள இலக்குகளையும் இது தாக்கக் கூடியது.
இந்த வகை உயர்தர ஏவுகணைகளை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற சில நாடுகளே வைத்துள்ளன. அக்னி-5 உருவாக்கப்பட்டதன் மூலம், இந்தியா இத்தரத்தில் ஆறாவது நாடாக இணைந்துள்ளது.
அக்னி-5 ஏவுகணை, பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் ‘Multiple Independently targetable Re-entry Vehicle’ (MIRV) தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இதை “மிஷன் திவ்யாஸ்திரா” என பெருமையுடன் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, 10,000 கி.மீ. தூரம் வரை தாக்கக்கூடிய அக்னி-6 ஏவுகணை உருவாக்கப்படுகின்றது. இந்த ஏவுகணை, 7500 கிலோ எடையுள்ள பங்கர் பஸ்டர் வகை போர்முனையை சுமக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய ஏவுகணை, நிலத்துக்கு அடியில் கட்டப்பட்ட கான்கிரீட் உள்கட்டமைப்புகளின் அடியில் பதுங்கிய இலக்குகளை அழிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெடிப்பதற்கு முன்னதாக சுமார் 100 மீட்டர் நிலத்துக்கடியில் ஊடுருவும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
B-12 போன்ற விலை உயர்ந்த விமானங்களை நம்புவதைவிட, ஏவுகணை மூலமாக பதுங்கு குழிகளை அழிக்கும் தன்னிச்சையான பாங்கரில் பஸ்டர் வகையை இந்தியா உருவாக்கியுள்ளது.
அக்னி-5 ஏவுகணையின் புதிய வடிவமைப்பில் இரண்டு மாறுபட்ட அமைப்புகள் உள்ளன. ஒன்று, தரையில் உள்ள இலக்குகளை நோக்கி வெடிக்கும் வகையான வான்வழி போர்முனையை கொண்டது. மற்றொன்று, அமெரிக்காவின் GBU-57 போல, அதிக எடையுள்ள கான்கிரீட் கட்டமைப்புகளுக்குள் ஊடுருவும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த போர்முனைகளின் எடை ஒவ்வொன்றும் எட்டு டன் வரை இருக்கக்கூடும் என்பதால், உலகிலேயே மிக சக்திவாய்ந்த போர் உபகரணங்களில் இதுவும் ஒன்று எனக் கருதப்படுகிறது. அக்னி-5ஐவிட 2500 கி.மீ. தூரம் குறைவாக இருந்தாலும், தாக்கும் திறனிலும் துல்லியத்திலும் இந்த புதிய ஏவுகணை மேம்பட்டதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கட்டளை மையங்கள், ஏவுகணை பதுங்கு குழிகள் மற்றும் முக்கிய இராணுவ உள்கட்டமைப்புகளை அழிக்க இது முக்கிய ஆயுதமாக இருக்கும். இது மணிக்கு 24,720 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையாகும்.
அமெரிக்க பங்கர் பஸ்டர் பொருட்களை விட குறைந்த செலவில் அதிக திறன் கொண்ட ஆயுதங்களை இந்தியா உருவாக்கி வருகிறது. உலகளாவிய பாதுகாப்பு சூழலில் வேகமாக நடைபெறும் மாற்றங்களுக்கு எதிராக, “சுயநிறைவு இந்தியா” திட்டத்தின் கீழ் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியில், DRDO எடுக்கும் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்தியாவின் வளர்ந்து வரும் இராணுவ உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம், நாட்டின் தன்னம்பிக்கையை வெளிக்காட்டுகிறது.