தரை மற்றும் கடலடியில் செயல்படக்கூடிய கண்ணிவெடி சோதனை வெற்றிகரமாக நிறைவு!
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து, தரை மற்றும் கடலடியில் செயல்படக்கூடிய கண்ணிவெடியை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி அளிக்க மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, DRDO மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து உருவாக்கிய கண்ணிவெடியின் சோதனை பரிசோதனை வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவான எம்ஐஜிஎம் என அழைக்கப்படும் இந்தக் கண்ணிவெடி சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், கடலடிப் போர்வீர்யத்தில் இந்தியக் கடற்படை மிகுந்த முன்னேற்றம் காணும் என கூறப்பட்டுள்ளது.