விமான அனுபவம் தரும் ரயிலில் பறக்க தயாரா?

இந்தியாவின் முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இம்மாத இறுதிக்குள் தண்டவாளங்களில் ஓடத் தொடங்கும் என மத்திய அரசு இனிமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எந்த வழித்தடத்தில் இயக்கப்படும்? அதில் உள்ள வசதிகள் என்ன? விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் குறைந்த செலவில் சிறந்த பயண அனுபவத்தை விரும்புவோர் என்பதால் ரயில் பயணம் எப்போதும் முதன்மையான தேர்வாக இருக்கிறது. பல கோடி மக்களால் விரும்பப்படும் ரயில்களில் காலத்திற்கேற்ப புதுமைகளை கொண்டு வர ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அம்ரித் பாரத், நமோ பாரத், வந்தே பாரத் தொடரில், பயணிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்த படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்துகிறது.

தீபாவளி பரிசாக அறிமுகமாகும் Vande Bharat Sleeper Express, டெல்லி – பாட்னா இடையே பிரயாக்ராஜ் வழியாக ஓட உள்ளது. 1000 கிலோமீட்டர் தூரத்தை 11 மணி 50 நிமிடங்களில் கடக்கும். அதே தூரத்தை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 23 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் பயண நேரத்தை பாதியாகக் குறைத்துள்ளது. இதனால் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

நீண்ட தூரப் பயணத்துக்காக உருவாக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ், 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. விமான வசதிகளுக்கு நிகரான சொகுசு ஏற்பாடுகளைக் கொண்டிருக்கும் இது, இரவு பயணிகளுக்கு சிறப்பு அனுபவத்தை தரும். 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 1128 பேர் பயணம் செய்யலாம். AC First Class, AC 2 Tier, AC 3 Tier என மூன்று பிரிவுகள் உள்ளதால் பல தரப்பினரும் வசதியாக பயணிக்க முடியும்.

ரியல்-டைம் ஆடியோ, வீடியோ அறிவிப்பு, LED திரைகள், பாதுகாப்பிற்காக CCTV கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. sliding doors, touch-free bio-vacuum toilets, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு படுக்கைகள், சுகாதாரமான கழிப்பறை வசதி, USB சார்ஜிங் போர்ட், தனிப்பட்ட வாசிப்பு விளக்குகள் ஆகியனவும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக First AC பெட்டிகளில் பயணிகள் நகரும் 5-நட்சத்திர ஹோட்டல் அனுபவத்தை பெறுவர்.

விமானம் போல வசதிகள் என்றாலும், கட்டணம் மிக அதிகமில்லை என ரயில்வே உறுதியளிக்கிறது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் கட்டணத்தை விட 10 முதல் 15 சதவீதம் மட்டுமே அதிகம் செலுத்த வேண்டியிருக்கும்.

BEML உடன் இணைந்து ICF தயாரித்த இந்த ரயில், advanced engineering, modern technology, premium comfort ஆகியவற்றின் இணைப்பாக அமைகிறது. emergency braking, anti-climbing system, Kavach anti-collision technology போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

முதலாவது ரயில் பாட்னாவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு டெல்லி சேரும். அடுத்தகட்டமாக மேலும் 10 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாராகி வருகின்றன. அவற்றில் சில 2026-க்குள் சேவையில் வரும். டெல்லி – அகமதாபாத், டெல்லி – போபால், டெல்லி – மும்பை, டெல்லி – புனே, டெல்லி – செகுந்தராபாத் போன்ற வழித்தடங்கள் பரிசீலனையில் உள்ளன.

“ரயில் டிக்கெட் கட்டணத்தைச் செலுத்தி விமானத்தில் பறக்கும் அனுபவத்தைப் பெறுவீர்கள்” என ரயில்வே வலியுறுத்துகிறது.

Facebook Comments Box