உலக வரலாற்றில் முதன்முறையாக 400 பில்லியன் டாலர் சொத்துகளை குவித்த முதலாவது கோடீஸ்வரராக எலான் மஸ்க் பெருமையை பெற்றுள்ளார். ப்ளூம்பெர்க் நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 440 பில்லியன் டாலருக்கு எட்டியது என்பது தெரிந்துள்ளது.
இதன் மூலம், உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் பில்கேட்ஸ் மற்றும் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்புகளை சேர்த்தாலும், எலான் மஸ்கின் சொத்துக்கு சமமாக இல்லை என்று ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது எலான் மஸ்கின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், டெஸ்லாவின் வெற்றிகள் மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் சாதனைகளின் மூலம் அவர் நிலைத்துள்ள மிகப்பெரிய பணப்பெருக்கத்தின் விளைவாகும்.
Facebook Comments Box