போப் பிரான்சிஸ் காலமானார்: உலகம் முழுவதும் கத்தோலிக்கர்கள் சோகத்தில் மூழ்கினர்

உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், கத்தோலிக்கர்களின் ஆன்மீக வழிகாட்டியுமான போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 88.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த போப் பிரான்சிஸ், 2013-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 12 ஆண்டுகளாக வாடிகன் திருச்சபையை வழிநடத்தி வந்தார். முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த அவருக்கு, சுவாசக்கோளாறு மற்றும் நிமோனியாவால் கடந்த பிப்ரவரி 14-ந் தேதி ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டது. 38 நாட்களுக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் ஆனாலும், விரைவில் மீண்டும் நிலைமையற்ற நிலையில் சென்றுவிட்டார்.

சிகிச்சை பலனின்றி போப் பிரான்சிஸ் நேற்று உயிரிழந்தார். அவரது மரணத்தை வாடிகன் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதுடன், கார்டினல் கெவின் பாரெல் செய்தியளித்தார். அவரது மறைவையடுத்து ரோம் நகரத்தின் அனைத்து ஆலயங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டன. வாடிகன் சிட்டி முழுவதும் சோகமூட்டம் நிலவுகிறது.

இந்தியாவில் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மக்கள் அவர் மறைவில் மிகுந்த கவலையுடன் உள்ளனர்.

இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பசிலிகாவில் நடைபெறும். இதில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், மற்றும் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

போப்பின் உடல், அவர் வாழ்ந்த சாண்டா மார்டா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு அங்கிகளுடன் பிஷப் ஆடை அவருக்கு அணிவிக்கப்பட்டுள்ளதாகவும், இறப்பிற்குப் பிறகு அவரது படங்களை வாடிகன் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box