பயங்கரவாதமும் பாகிஸ்தானும்: பின்னிப் பிணைந்த உண்மை
பாகிஸ்தானும் பயங்கரவாதமும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றாகவே பின்னியுள்ளன என்பதற்குச் சமீபத்திய நிகழ்வுகள் பல ஆதாரங்களை வழங்குகின்றன. பாகிஸ்தானின் ராணுவ செய்தித்துறை தலைவராக உள்ள ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரியின் தந்தை சுல்தான் பஷிருதீன் மஹ்மூத், ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
அணு விஞ்ஞானியாக இருந்த மஹ்மூத், பாகிஸ்தானின் அணு ஆயுத வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர். அவர், அப்துல் கதீர் கானின் உதவியுடன், யுரேனிய செறிவூட்டலிலும், புளூட்டோனியம் ஆயுத தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். அதற்கு மேலாக, அவர் ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தா மற்றும் தலிபான் அமைப்புகளுக்கு நிதி, தொழில்நுட்பம் வழங்க முயன்றவர் என குற்றச்சாட்டுகள் உள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதிகள் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்தபோன்ற ஒரு பயங்கரவாதியின் மகனாக இருக்கும் அகமது ஷெரிப், தற்போது பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தி தொடர்பாளராக செயல்படுகிறார். இவர், இந்தியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு மத அடிப்படை பெயர்களை வைத்து, ‘ஜிஹாத்’ என்ற ஆளுமையை தூண்டும் வகையில் உரையாற்றி வருகின்றார்.
பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனீர், மத அடிப்படைவாதக் கருத்துக்களை வெளிப்படையாக பேசிய நிலையில், அவரது பேச்சுக்கு ஏற்றவாறே, 7 நாட்களில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் நேபாள பிரஜை ஒருவரையும் சேர்த்து 26 இந்துக்கள் தாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் “ஆப்ரேஷன் சிந்தூர்” எனும் விரைவான பதிலடி நடவடிக்கையில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்து, 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றது.
இந்த நிலையில், பாகிஸ்தான் மீண்டும் பொய்யான தகவல்களை ஊடகங்களில் பரப்பி, உண்மையை மறைக்க முயற்சிக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் தனது நடவடிக்கைகளுக்கு “இமான், தக்வா, ஜிஹாத் ஃபி சபிலில்லாஹ்” என்ற மத அடிப்படைக் கொள்கைகளை முன்வைத்து செயல்படுகிறது. இவை அனைத்தும் பாகிஸ்தான் அரசும் ராணுவமும் பயங்கரவாதத்திற்கு நேரடி ஆதரவாளர்கள் என்பதை உறுதி செய்கின்றன.
இந்த நிலையில், ஒசாமா பின்லேடனுடன் நேரடி தொடர்பு கொண்ட, அணுகுண்டு உருவாக்க முயன்ற பயங்கரவாதியின் மகனே இன்று பாகிஸ்தான் ராணுவத்தின் உத்தியோகபூர்வ முகமாக செயல்படுவதை உலகம் கண்டுகொள்ள வேண்டும். பாகிஸ்தான் என்றாலே பயங்கரவாதம் என்பதற்கான நேரடி சான்றாக இந்தத் தகவல்கள் பயன்படுகின்றன.