உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,28,86,701 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல உலக அளவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 37,16,335 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி பேரழிவை உருவாக்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகமே இந்த கொரோனாவால் முடங்கி போயுள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலையில் உலகில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 கோடியைத் தாண்டி இருக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,16,335 ஆக இருப்பதில் இருந்தே தெளிவாகுகிறது.
கொரோனாவின் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 15,55,97,064 ஆகும்.. உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,28,86,701 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,706 ஆக உயர்ந்திருக்கிறது. நாட்டின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 34,07,19. இந்தியாவில் தற்போதைய நிலையில் 16,42,832 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்களாகும்.
நாட்டில் இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 28,572,359 பேர்கள்.. நேற்று மட்டும் ஒரே நாளில் 13,13,71 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேஸிலில் தொற்று எண்ணிக்கை 16,803,472 ஆக உயர்ந்துள்ளது.. அங்கு 83391 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. 469784 பேர் இதுவரை அங்கு உயிரிழந்துள்ளனர்.. நேற்று மட்டும் 2078 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 5,099,182 பேர் இதுவரை கொரோனாவைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 12-வது இடத்தில் உள்ளது.. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6-வது இடத்தில் உள்ளது.
Discussion about this post