ஈரானில் ஆட்சி மாற்றம் தேவையில்லை: டொனால்டு ட்ரம்ப் கருத்து

0

ஈரானில் ஆட்சி மாற்றம் தேவையில்லை: டொனால்டு ட்ரம்ப் கருத்து

ஈரானில் ஆட்சியை மாற்றுவது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால், அதனைத் தவிர்ப்பது சிறந்தது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. பதட்டம் இல்லாமல் அமைதி நிலவ வேண்டும். ஆட்சி மாற்றம் நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தும். நாங்கள் அந்த மாதிரியான குழப்பங்களை விரும்புவதில்லை,” என கூறினார்.

முன்னதாக தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆட்சி மாற்றம் என்பது அரசியல் ரீதியாக சரியான சொல்லாக இருக்காது. ஆனால், தற்போதைய ஈரானிய ஆட்சியால் நாடு முன்னேற முடியவில்லை என்றால், ஏன் மாற்றம் தேவையில்லை?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் கூறியதாவது: “ஈரானும் அமைதியையே விரும்புகிறது. இஸ்ரேலும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறியுள்ளது. அவர்களது ராணுவ நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக உள்ளன. இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்களை நிறுத்தி, தங்கள் தளங்களுக்கு திரும்ப வேண்டும். ஈரானின் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது.”

போரின் பின்னணி:

ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறது என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 13ம் தேதி, இஸ்ரேல் விமானங்கள் ஈரானின் 4 அணுசக்தி தளங்களைத் தாக்கின. பின்னர், 22ம் தேதி அமெரிக்க விமானங்கள் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய பகுதிகளில் 3 அணுதளங்களைத் தாக்கின.

இதற்குப் பதிலாக, ஈரான் ராணுவம் கத்தாரில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தை நோக்கி 19 ஏவுகணைகளை செலுத்தியது. அவை எல்லாம் காற்றிலேயே அழிக்கப்பட்டது. உயிரிழப்பும் சேதமும் ஏற்படவில்லை.

பின்னர், இஸ்ரேல் விமானங்கள் டெஹ்ரான் உள்ளிட்ட இடங்களை குண்டுகள் மூலம் தாக்க, பதிலடியாக ஈரானும் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை ஏவுகணைகள் மூலம் தாக்கியது.

இந்த நிலையில், கத்தார் நாடு சமாதானம் ஏற்படுத்த முயன்றது. அதன் தலைவர்கள் அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், ஒரு உளர்ந்த உடன்பாடு எட்டப்பட்டது. இதனடிப்படையில் ஈரான்–இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here