இஸ்ரேலும் ஈரானும் குழந்தைகள் போல நடந்துகொண்டதால் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டி வந்தது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,
“இஸ்ரேலும் ஈரானும் பள்ளிக்கூடத்தில் சண்டையிடும் இரண்டு சிறுவர்களைப் போல இருந்தார்கள். அவர்களுக்குள் பெரும் மோதல் ஏற்பட்டது. அவர்கள் நரகத்தைப் போல சண்டையிட்டனர். அவர்களை உடனே பிரிக்க இயலாது. ஏனெனில், அவர்களது சண்டையை சில நிமிடங்கள் நடந்தவுடனே தடுப்பது தான் சுலபம்” என விமர்சனத்துடன் பேசினார்.
அப்போது நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ருட்டே பேச குறுக்கிட்டு,
“ஒரு பெற்றோராக சில நேரங்களில் கடுமையான சொற்களை பயன்படுத்த வேண்டி வரும்,” என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த டிரம்ப்,
“சில சமயங்களில் பிள்ளைகள் நேர்மையான பாதையில் செல்ல வலுவான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டி வரும். அப்போது ஒரு சிறப்பான வார்த்தையை தேர்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
இஸ்ரேலும் ஈரானும் நேற்று போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டிருந்த போதும், இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசியதை தொடர்ந்து, அதில் ஏமாற்றமடைந்த டிரம்ப், நேரலை டிவி நிகழ்ச்சியில் கடுமையான சபைச்சொற்களுடன் பேசியது குறிப்பிடத்தக்கது. பின்னர், இரு தரப்பும் தாக்குதல்களை மெதுவாக குறைத்தன என்பதும் முக்கியமானது.