“ஈரான் உடனான போரில் அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை” – அயதுல்லா அலி கமேனி

“இஸ்ரேலை காப்பாற்றும் நோக்கில் ஈரானுடன் போர் புரிந்த அமெரிக்கா எந்த ஒரு வெற்றியும் பெறவில்லை” என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்–ஈரான் போருக்கு இடைவெளி அறிவிக்கப்பட்ட பின், இது தொடர்பாக கமேனி முதல் முறையாக தனது கருத்தை சமூக வலைதளமான எக்ஸ்-இல் பகிர்ந்துள்ளார். அதில், “போலியான சியோனிச ஆட்சியை (இஸ்ரேல்) வீழ்த்தியதற்காக எனது வாழ்த்துக்கள். இஸ்லாமிய குடியரசின் தாக்குதலால் அந்த ஆட்சி பலவீனமடைந்து நசுக்கியது.

அமெரிக்கா நேரடியாக போரில் ஈடுபட்டது, ஏனெனில் சியோனிச ஆட்சி முற்றிலும் அழிந்து விடும் என அந்நாடு அச்சமடைந்தது. ஆனால் அந்த முயற்சி எதையும் கொண்டுவந்ததில்லை. அமெரிக்கா எந்தவித சாதனையும் இல்லாமல் பின்னடைந்தது.

அமேரிக்காவின் முக்கிய ராணுவ தளமான அல்-உதெய்த் தாக்கப்பட்டதன் மூலம், எதிர்காலத்தில் ஈரான் மீண்டும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கக்கூடியதாக இருப்பது தெளிவானது. எதிரிகள் தாக்கினால், அதிக விலை செலுத்த நேரிடும்” என்றார்.

இஸ்ரேல், ஜூன் 13-ஆம் தேதி ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளை குறிவைத்து தாக்குதலை ஆரம்பித்தது. அதன்பின் கமேனி ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்தார். ஜூன் 22-ஆம் தேதி அமெரிக்கா ஈரானின் 3 அணுத் தளங்களை தாக்கியது. அதன் பதிலாக, ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தைக் குறிவைத்து தாக்கியது.

இதையடுத்து, ஜூன் 24-ஆம் தேதி அமெரிக்கா போர் நிறுத்தத்தை அறிவித்தது. பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “ஈரான் இனி அணு ஆயுதம் உருவாக்க முடியாது; அவ்வாறு முயன்றால், அது எங்கள் கண் பாட்டில் இருக்கும்,” என கூறினார். ஆனால், கமேனி தெரிவித்திருக்கும் “அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை” என்ற கூற்று முக்கியக் கவனத்தை பெற்றுள்ளது.

Facebook Comments Box