ஈரான் அணு ஆயுத உருவாக்கத்தைத் தடுக்கும் நோக்கில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவத் தலைவர்கள் மற்றும் அணுசக்தித் துறையில் பணியாற்றிய பல விஞ்ஞானிகள் உயிரிழந்தனர்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலால் மேஜர் ஜெனரல் மொகம்மது பஹெரி, கமாண்டர் உசைன் சலாமி மற்றும் அணுசக்தி விஞ்ஞானி மொகம்மது மெஹ்தி டெஹ்ரான்சி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கொல்லப்பட்டனர்.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், உயிரிழந்த ராணுவத் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு ஈரான் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தியது.
நேற்று காலை தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். நாட்டுக்காக உயிர்நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஊர்வலம் நடைபெற்றதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.