“போரை நிறுத்த மறுத்தால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்!” – டிரம்ப் எச்சரிக்கை

அடுத்த 50 நாட்களில் உக்ரைனுடன் போரை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதிக்கு ஒப்புதல் தரவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தயாராகவில்லை என்றால், ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாங்கள் இரண்டாம் கட்ட வரிகளை தயாராக வைத்துள்ளோம். இந்த 50 நாட்கள் கால எல்லைக்குள் உக்ரைன்-ரஷ்யா இடையே ஒரு சமாதான உடன்பாடு உருவாகவில்லை என்றால், ரஷ்யா மீது 100 சதவீத வரிகளை விதிக்க நேரிடும்,” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “ஜனாதிபதி புதின் மீது நான் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளேன். அவர் ஒரு நம்பகமான தலைவராக இருப்பார் என நான் எதிர்பார்த்தேன். அவர் பேசும்போது மென்மையாகவும், கவர்ச்சியாகவும் உரையாற்றுவார். ஆனால் இரவிலே சகஜமாக மக்கள் மீது குண்டுகள் வீசும் நடவடிக்கையை மேற்கொள்கிறார். இதற்கெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை,” என விமர்சித்தார்.

“உக்ரைனை ஆதரிக்க அமெரிக்கா, நேட்டோவின் படைகளுக்கு முக்கியமான ஆயுதங்களை வழங்கும். அதில் பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு பேட்டரிகள் உள்ளிட்டவை அடங்கும்,” என்றும் ட்ரம்ப் கூறினார்.

முந்தைய வாரம் செய்தியாளர்களிடம் பேசியபோதும், புதினின் நடவடிக்கைகள் குறித்த அதிருப்தியை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார். “அவர் பலர் உயிரை பறிக்கின்றார். அதனால் அவரைப் பற்றிய என் அபிப்பிராயம் மிக மோசமாக மாறியுள்ளது” என்றும் அவர் அப்போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box