உக்ரைன் மீது போரை முடிவுக்கு கொண்டு வர 50 நாட்கள் அவகாசம் – தவறினால் 100% வரி: ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

உக்ரைன் மீது போரை முடிவுக்கு கொண்டு வர 50 நாட்கள் அவகாசம் – தவறினால் 100% வரி: ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்தக் களத்தில் இரு நாடுகளும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றாமல் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்த சூழலில், அமெரிக்க அதிபராக 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இரு நாடுகளுக்கிடையில் போரை முடிவுக்கு கொண்டு வர வழியமைக்க, சமாதான முயற்சிகளை தொடங்கியிருந்தார். ஆனால் அவரது இந்த முயற்சிகள் இன்றளவுக்கு வெற்றியளிக்கவில்லை.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டொனால்டு ட்ரம்ப், உரைக்கிடையில் மிகுந்தக் கடுமையுடன் கூறியதாவது:

“அடுத்த 50 நாட்களில் உக்ரைனுடன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனாதிபதி புதின் சமாதானத்திற்கு ஒப்புக்கொள்வதில்லை என்றால், ரஷ்யாவிற்கு எதிராக 100 சதவிகித வரி விதிக்கப்படுQaம்.

வாஸ்தவத்தில், நான் புதினிடம் பெரிதும் விரக்தியடைந்துள்ளேன். அவர் ஒரு நபராக தனது சொற்களை நிறைவேற்றக் கூடியவர் என நான் முந்தைய காலங்களில் நம்பினேன். ஆனால் அவர் கூறுவது ஒன்று, செய்கிறது இன்னொன்று. வெளியில் அவர் மென்மையாகவும் அழகாகவும் பேசுவார். ஆனால் இரவுகளில் அவர் நடத்துவது தாக்குதல்களே – பொதுமக்கள் மீது குண்டுகளை வீசி உயிரிழப்புகளுக்கு காரணமாகிறார்.”

மேலும் ட்ரம்ப் தொடர்ந்துபேசும்போது, “ரஷ்யாவை எதிர்த்து உக்ரைனுக்கு ஆதரவாக போரிடும் நேட்டோ கூட்டணிப் படைகளுக்கு, அமெரிக்கா தனது பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளையும், அதற்கான பவர்பட்டரிகளையும் அனுப்பும் நடவடிக்கையை மேற்கொள்ளும்,” என்றும் தெரிவித்தார்.

Facebook Comments Box