சீனாவின் மெகா அணை திட்டம் இந்தியாவுக்கு ஒரு அபாயமா? – விரிவான பார்வை

சீனாவின் மெகா அணை திட்டம் இந்தியாவுக்கு ஒரு அபாயமா? – விரிவான பார்வை

இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட காலமாக நிலவும் எல்லைப் பிரச்சனைக்கு அடுத்ததாக, இப்போது புதிய வடிவத்தில் ஒரு புதிதான அச்சுறுத்தலை சீனா இந்தியா மீது ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, திபெத் தன்னாட்சி பகுதியை கடக்கும் ‘யார்லங் சாங்போ’ (இந்தியாவிலது பிரம்மபுத்திரா) நதிக்கு குறுக்கே, உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டமான ‘மெகா அணை’ கட்டப்படும் பணிக்கு தொடக்க விழா சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் ஜூலை 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வு குறித்து சீன அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டதும், அது இந்தியா மற்றும் வங்கதேசத்தில் அச்சம் உருவாக்கியுள்ளது.

திபெத்தில் தோன்றி, இந்தியாவாகி வங்கதேசம் நோக்கி…

யார்லங் சாங்போ நதி திபெத் மேடுகளில் உருவாகி, இந்தியாவுக்குள் பிரம்மபுத்திரா என்ற பெயரில் நுழைந்து, பின்னர் வங்கதேசத்தில் கடலோடாக இணையுகிறது. இந்த நதிக்கு குறுக்கே அமைக்கப்படும் அணை, இந்தியா மற்றும் வங்கதேசத்தில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கக்கூடும் என்ற கவலையை எழுப்பியுள்ளது.

சுமார் 167 பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த மாபெரும் நீர்மின் நிலையத்திற்கு சீனா “மொடுடோ ஹைட்ரோபவர் ஸ்டேஷன்” என்று பெயரிட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறும்போது, சீனாவின் தற்போதைய ‘த்ரீ கார்ஜஸ் டேம்’ஐ விட மூன்றாம் மடங்கு அதிக மின் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திபெத் மக்களுக்கு பயன்பாடு என சீனாவின் வாதம்

திபெத்திய கிராமப்புற மக்களுக்கு மின்சாரம் வழங்கவும், பசுமை ஆற்றல் உற்பத்தியை மேம்படுத்தவும் இந்த அணை கட்டப்படுகிறது என சீனா விளக்கம் அளிக்கிறது. ஆனால், இந்த திட்டத்திற்கு பின்னால் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்து பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

எதிர்ப்புக்களும் கவலைகளும்…

இந்த நதி அருணாச்சலப் பிரதேசம், அசாம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் பாய்கிறது. எனவே இந்த அணை கட்டப்படுவது, அந்த பகுதிகளில் இயற்கை சீரழிவையும், நீர்வள அபாயத்தையும் ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2020-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ‘லோயி இன்ஸ்டிட்யூட்’ வெளியிட்ட அறிக்கையில், “திபெத் பகுதியில் சீனாவின் ஆதிக்கம், இந்தியாவின் நீர்வளத்திற்கு ஆபத்தாக மாறும்” என கூறப்பட்டது.

அருணாச்சல முதல்வர் பெமா காண்டு ஒரு பேட்டியில், “இந்த அணை அமைக்கப்பட்டால், பிரம்மபுத்திரா, ஸியாங் போன்ற நதிகள் வறண்டுப் போகும். இதன் தாக்கம் பழங்குடியினர் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும். சீனா இதனை ஒரு ‘வாட்டர் வெடிகுண்டாக’ மாற்றக் கூடும்” என்றார்.

இந்திய அரசு பதில் நடவடிக்கைகள்…

இந்த திட்டத்தின் விளைவுகள் குறித்து கடந்த ஜனவரியில் இந்திய வெளியுறவு அமைச்சகம் “கீழ்நாடுகளின் உயிர்நிலை பாதிக்கப்படக்கூடாது” என்று சீனாவிடம் வலியுறுத்தியது. இந்தியா தானும் பிரம்மபுத்திரா நதியில் தன்னிச்சையான அணை கட்டும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது. இது ஒரு ‘பஃபர் அணை’ போன்று செயல்பட்டு, சீனா திடீரென அதிக நீரை விடும் சூழலில் பாதுகாப்பளிக்கக்கூடும்.

வங்கதேசமும் எதிர்வினை தெரிவித்துள்ளது…

வங்கதேசம் சீனாவிடம், இந்த மெகா திட்டம் குறித்து விரிவான தகவல்களை பகிருமாறு பிப்ரவரி மாதம் கடிதம் எழுதியது. ஆனால் சீன வெளியுறவு அமைச்சகம், “இது சீனாவின் உள்நாட்டு உரிமை” எனக் கூறி, கீழ்நாடுகளின் அச்சங்களை புறக்கணிக்கிறது.

அணை திட்டம் மட்டுமல்ல, அரசியல் கட்டமைப்பும்…

இந்த மெகா திட்டம், இந்தியா மீது நீர்வள ஆதிக்கத்தை கொண்டுவருவதோடு, திபெத்தின் மீதான சீனா ஆட்சி கட்டுப்பாட்டையும் வலுப்படுத்தும் முயற்சி என கருதப்படுகிறது.

‘தி கிரேட் பெண்ட்’ எனப்படும் பிரம்மபுத்திரா நதியின் பிரமாண்ட வளைவு பகுதியில், நம்சா பார்வா மலையடிவாரத்தில், 20 கிமீ நீள குகைகள் மூலமாக நதியின் திசையை மாற்றி, ஐந்து அடுக்கில் மின் நிலையங்களை அமைப்பதுதான் திட்டம். இந்த உற்பத்தி மின்சாரம் திபெத்தின் தேவையை தாண்டி, சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களுக்கு அனுப்பப்படும்.

ஜி ஜின்பிங் இந்த திட்டத்தை முக்கியத்துவத்துடன் பார்க்க, “ஸிடியாங்டாங்சோங்” என பெயரிட்டு “மேற்கே உற்பத்தி செய்து, கிழக்கே அனுப்பும்” திட்டம் என அறிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு…

திபெத்தில் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அங்கு இத்தகைய பெரும் அணை அமைத்தால், எதிர்வினை தீவிரமாக இருக்கும். இதனாலேயே திபெத்திய மக்கள் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு அடிதடி, கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மெகா அணை திட்டம், ஒரு பசுமை ஆற்றல் திட்டம் மட்டும் அல்ல. அது ஒரு வாட்டர் வேப்பன் எனப்படும் நீர்வள ஆதிக்க ஆயுதமாகவும் செயல்படக்கூடும். அருணாச்சல முதல்வர் குறிப்பிட்டது போல, இது வாட்டர் வெடிகுண்டு தான்.

இன்றைய யுத்தங்கள் துப்பாக்கி, ராணுவத்துடன் மட்டுமல்ல. நீர்வளப் போர் மற்றும் உயிரணு போர் போன்ற மாற்று போர் நடைமுறைகளாகும். அதில், சீனாவின் மெகா அணை திட்டம், இந்தியாவுக்கான ஒருவித எச்சரிக்கை மணி தான்.

Facebook Comments Box