ரஷ்யாவில் பயணிகள் விமானம் தீவிபத்தில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் பயணிகள் விமானம் தீவிபத்தில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் நேற்று இடம்பெற்ற ஒரு சிறிய ரக பயணிகள் விமான விபத்தில் பயணித்த 49 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சைபீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் ரஷ்யாவின் அங்காரா ஏர்லைன்ஸிற்குச் சொந்தமான ஏஎன்-24 வகை விமானம், பிளாகோ வெஷ்சென்ஸ்க் நகரத்தில் இருந்து அமுர் மாகாணத்திலுள்ள டிண்டா நகரை நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உள்பட 43 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் இருந்தனர்.

பயணத்தின் நடுவே, விமானம் திடீரென விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தின் ரேடாரில் இருந்து காணாமல் போனது. உடனடியாக விமானத்தின் திசையை கண்காணிக்க மீட்பு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன. சற்று நேரத்திலேயே, டிண்டா நகரத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமுர் வனப்பகுதியில் விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், விமானத்தில் இருந்த அனைத்து 49 பேரும் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.

இந்த விமான விபத்துக்கான காரணம் என்ன என்பதை அறிய அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Facebook Comments Box