ஒஹியோ சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியையுடைய மதுரா ஸ்ரீதரன் நியமனம்

இந்திய வேருடைய மூத்த சட்டவல்லுநரான மதுரா ஸ்ரீதரன், ஒஹியோ மாநிலத்தில் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியவர். தற்போது, அவருக்கு அந்த மாநிலத்தின் 12-வது சொலிசிட்டர் ஜெனரல் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை ஒஹியோ மாநிலத்தின் அட்டர்னி ஜெனரலான டேவ் யோஸ்ட் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஒஹியோ மாநில சார்பில் முக்கியமான வழக்குகள் மற்றும் மேல்முறையீட்டு விசாரணைகள் ஆகியவற்றை மதுரா கவனிக்க உள்ளார். இந்நிலையில், ‘‘ஒரு அமெரிக்கர் அல்லாத நபரை சொலிசிட்டர் ஜெனரலாக ஏன் நியமித்திருக்கிறார்கள்?’’ என்ற விவாதங்கள் சமூக ஊடகங்களில் உருவாகியுள்ளது.

இந்த கேள்விக்கு பதிலளித்த டேவ் யோஸ்ட் தனது அறிக்கையில், ‘‘மதுரா தரன் அமெரிக்க குடிமகள். அவர் அமெரிக்க நபருடன் திருமணம் செய்துள்ளார். அவர்களது பிள்ளையும் அமெரிக்க குடிமகன்தான். இப்படி இருக்க, அவரது பெயரே உங்களுக்குச் சிக்கலா? அப்படி என்றால், பிரச்சனை மதுரா தரனிடம் இல்லை; அவருடைய நியமனத்திலும் இல்லை. அவர் மிகச் சிறந்த சட்ட அறிவும், அனுபவமும் கொண்டவர். உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் அவர் திறமையாக வாதாடியுள்ளார்’’ எனத் தெரிவித்தார்.

Facebook Comments Box