இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை: 2 மாதத்தில் ரூ.1,240 கோடி இழப்பு

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்தது அந்நாட்டு அரசு. அதேபோல், இந்தியா கூட பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தும் தனது விமானங்களுக்கு தடை விதித்தது.

கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி முதல், பாகிஸ்தான் தனது வான்வெளியில் இந்திய விமானங்களுக்கான அனுமதியை ரத்து செய்தது. இதனால், ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை பாகிஸ்தான் ரூ.1,240 கோடி (சுமார் 4.1 பில்லியன் ரூபாய்) இழப்பு நேர்ந்துள்ளது. இதனை பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் உறுதிப்படுத்தியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் மறுத்ததும் இந்திய விமான நிறுவனங்களின் அனைத்து விமானங்களுக்கும் பாகிஸ்தான் தடை விதித்தது. இதன் விளைவாக பாகிஸ்தான் வான்வெளியில் போக்குவரத்து சுமார் 20% குறைந்துள்ளது. முன்பு நாள்தோறும் 100-150 இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தியிருந்தன. இப்போது முழுமையாக தடை உள்ளது.

இந்திய விமானங்கள் இந்தியாவிலிருந்து அயல்நாடுகளுக்குச் செல்லும் பயணத்தில் மாற்று பாதைகளை பயன்படுத்தி தடையில்லாமல் பயணம் செய்கின்றன. பாகிஸ்தானின் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த முடியாமை காரணமாக நிதி நெருக்கடி மற்றும் பயண நேர சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக, பாகிஸ்தான் இருந்து தென்கிழக்கு ஆசியா செல்லும் விமானங்கள் இந்திய வான்வெளியைத் தவிர்க்க வேண்டி உள்ளது.

இந்த தடை வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி காலை 4.59 மணிவரை அமலில் இருக்கும் என பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தமும் வந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான இந்த சம்பவம் இந்தியாவுக்கும் சர்வதேச அளவிலும் பெரும் அதிர்வலையாக இருந்தது.

Facebook Comments Box