இந்திய பொருட்களுக்கு 50% வரிவிதிப்பு அடுத்த வாரம் அமலுக்கு வரும்: ட்ரம்ப் நிர்வாகம் உறுதி

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, இந்தியா ரஷ்ய எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்வதன் மூலம் ‘லாபம் தேடும் திட்டத்தில்’ ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்தியப் பொருட்களுக்கு மீதான 50 சதவீத வரிவிதிப்பு அடுத்த வாரம் திட்டமிட்டபடி அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நவரோ கூறியதாவது, “பிப்ரவரி 2022-ல் ரஷ்யா உக்ரைனின் மீது போர் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கவில்லை. அப்போது இந்தியாவின் தேவைக்கு ஒரு சதவீதம் மட்டுமே ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்டது. ஆனால் இப்போது அது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஒரு லாபப் பகிர்வுத் திட்டம்; ரஷ்யா பணத்தை மாற்றும் ஒரு தொழிற்சாலையாக செயல்படுகிறது.”

நவரோ தொடர்ந்தார், “இந்தியாவுடனான எங்கள் வர்த்தகம் அமெரிக்கர்களுக்கு லாபத்தை தரவில்லை. இந்தியா வரிகளில் மகாராஜ் போல நடந்துகொள்கிறது. இதனால் அமெரிக்க தொழிலாளர்களும் வணிகத்திற்கும் பாதிப்பு உண்டு. அவர்கள் எங்களிடமிருந்து பெறும் பணத்தை ரஷ்ய எண்ணெய் வாங்க பயன்படுத்துகிறார்கள். ரஷ்யர்கள் இதைப் போர்க்குப் பயன்படுத்தி ஆயுதங்கள் உருவாக்கி, உக்ரைனியர்களைக் கொல்லுகின்றனர்.”

ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதால் ரஷ்யாவின் போருக்கு நிதியளிக்க உதவுகிறது எனக் குற்றம்சாட்டுகிறது. இதையடுத்து, இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரிவிதிப்பும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த வரிவிதிப்பால் இந்தியா-அமெரிக்க உறவுகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் பெரிதும் வாங்கும் சீனா மீது அமெரிக்கா இதுபோன்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

Facebook Comments Box