அமெரிக்காவில் பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 54 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர்.

பேருந்து நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியிலிருந்து நியூயார்க் நகரத்துக்குப் பயணம் செய்துகொண்டு இருந்தது. பஃபலோ நகரிலிருந்து கிழக்கே 40 கி.மீட்டர் தொலைவில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர், 49 பேர் லேசான காயங்களுடன் உயிர் மிச்சமடைந்தனர். உயிரிழந்தவர்கள் யார் என்பதற்கான தகவல் தற்போது வெளியாகவில்லை.

Facebook Comments Box