உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளார்: உக்ரைன் தூதர் தகவல்

உக்ரைன் அதிபர் வேளாண்மை மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளுக்காக விரைவில் இந்தியா வர இருக்கிறார் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்தார்.

உக்ரைன்–ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் பெரும்பான்மையாக குழந்தைகள், பெண்கள் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்க அதிபர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அண்மையில், பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் விலாதிமிர் புடின் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது, போரை அமைதி வழியாக தீர்க்க இந்தியாவின் நிலைப்பாடு உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த நிலையில் உக்ரைன் தூதர் போலிஷ்சுக் கூறியதாவது:

“உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வர இருக்கிறார். பயணத் தேதியை இறுதியாக ஏற்பாடு செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்தியா வந்த ஜெலென்ஸ்கி பிரதமர் மோடியை சந்தித்து, போர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துவார். இதன் மூலம் இருதரப்பு உறவு மேலும் வலுப்படும்.”

இந்த பயணம் இந்தியா–உக்ரைன் உறவுகளை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box