இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்களுக்கு தடைவிதிப்பு நீட்டிப்பு
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தனது வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதைத் தடை செய்தது. இந்தத் தடைவிதிப்பு ஏப்ரல் 30 முதல் அமலுக்கு வந்தது. பின்னர் ஒவ்வொரு மாதமும் இத்தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா மீண்டும் பாகிஸ்தான் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட வான்வெளி தடையை செப்டம்பர் 24 வரை நீட்டித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை அதே தேதிவரை மூடுவதாக அறிவித்துள்ளது.
இந்தத் தகவல், விமானிகள் பயன்பாட்டுக்கான அறிவிப்பில் (NOTAM) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
Facebook Comments Box