அமெரிக்கா எப்-35 போர் விமான விபத்து: கடும் பனிக்காற்றால் சக்கரம் செயலிழப்பு

அமெரிக்காவின் அலாஸ்கா விமானப்படை தளத்தில் எப்-35 ரக போர் விமானம் சக்கர கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது. விமானி பாதுகாப்பாக பாராசூட்டின் உதவியுடன் தப்பினார்.

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எப்-35 போர் விமானம் அலாஸ்கா விமான தளத்திலிருந்து நேற்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. அப்போது வெப்பநிலை மைனஸ் 18 டிகிரியாக இருந்தது. விமானம் வெற்றிகரமாக பறந்தது. ஆனால் தரையிறங்கும் நேரத்தில் அதன் சக்கரங்கள் முறையாக கீழிறங்கவில்லை. ஹைட்ராலிக் குழாய்களில் பனிக்கட்டி உறைந்ததால் இந்த சிக்கல் ஏற்பட்டது.

சென்சார் படி, சக்கரம் முழுமையாக வெளியே வந்ததாக பைலட்டுக்கு காட்டியது. உடனே அவர் கட்டுப்பாட்டு அறையிடம் தகவல் தெரிவித்தார். பிரச்சினையை சரிசெய்வதற்காக, விமானத்தை தயாரித்த லாக்கீட் மார்டின் நிறுவன பொறியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. சுமார் 50 நிமிடங்கள் பைலட், பொறியாளர்களுடன் ஆலோசித்து தீர்வு காண முயன்றார்.

பொறியாளர்கள் பரிந்துரைத்தபடி, சக்கரம் பாதியாக வெளியே வந்த நிலையில் விமானத்தை தரையிறக்கி மீண்டும் மேலெழுப்பினால் முழுவதுமாக சக்கரம் வெளிவரும் வாய்ப்பு உள்ளது என கூறினர். அதன்படி பைலட் இரண்டு முறை முயன்றார். ஆனால் சக்கரம் வெளிவருவதற்குப் பதிலாக முற்றிலும் உள்ளே சென்று முடங்கியது.

இதனால் விமானி விமானத்தை ஓடுபாதை அருகே கொண்டு வந்து, பாராசூட் மூலம் குதித்து தப்பினார். உடனே விமானம் ஓடுபாதையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது.

பின்னர் விசாரணையில், கடும் பனிப்பொழிவால் ஹைட்ராலிக் குழாயில் உள்ள திரவத்தில் மூன்றில் ஒரு பகுதி தண்ணீராக மாறி இருந்தது தெரியவந்தது. இதனை முன்கூட்டியே பரிசோதித்திருந்தால் விபத்தைத் தவிர்க்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box