ரஷ்யா ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் மிகப்பெரிய போர்க்கப்பல் மூழ்கியது
உக்ரைனின் மிகப்பெரிய போர்க்கப்பல் ரஷ்யா ட்ரோன் மூலம் அழிக்கப்பட்டது. இதில் உக்ரைன் படையின் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர். காணாமல் போன வீரர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உக்ரைனா-ரஷ்யா இடையிலான போரை நிறுத்த முயற்சி எடுத்தார். ஆனால் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. ரஷ்யா தீவிரமாக உக்ரைனுக்கு எதிரான தாக்குதலை தொடருகிறது.
உக்ரைனில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ட்ரோன் உற்பத்தி நிலையங்களை ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலம் அடித்துவருகிறது. தற்போது ரஷ்யா போர்க்கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களில் ரஷ்யா பல வகை ட்ரோன்கள் தயாரிப்பை தீவிரப்படுத்தியது. போர்க்கப்பல்களை தாக்க ‘ஷீ ட்ரோன்களை’ உருவாக்கியது. இவ்வாறு உருவான ட்ரோன் மூலம் தற்போது முதன்முறையாக தாக்குதல் நடக்கிறது. ரிமோட் மூலம் தண்ணீரில் படகுபோல் செல்லும் இந்த ட்ரோன், போர்க்கப்பல்களை அடித்து மூழ்கடிக்கும் திறன் கொண்டது.
உக்ரைன் கடற்படையில் மிகப்பெரிய போர்க்கப்பல் ‘சிம்ஃபெரோபோல்’ இருந்தது. இது 2021-ல் உக்ரைன் கடற்படையில் சேர்க்கப்பட்டது. லகுனா வகை போர்க்கப்பலான இதில் ரேடியோ, எலக்ட்ரானிக், ரேடார் மற்றும் ஆப்டிக்கல் கண்காணிப்பு கருவிகள் இருந்தன. இந்த கப்பல் டனுபே ஆற்றை கடந்து சென்றபோது, ரஷ்யா ‘ஷீ ட்ரோன்’ மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனால் ‘சிம்ஃபெரோபோல்’ வெடித்து சிதறியது. இது ஷீ ட்ரோன் மூலம் போர்க்கப்பலை வெற்றிகரமாக அடித்த முதல் சம்பவமாகும்.
இந்த தாக்குதலில் உக்ரைன் படையின் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர். காணாமல் போன வீரர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரஷ்ய ராணுவ அமைச்சகம் இந்த போர்க்கப்பல் மூழ்கியதாக அறிவித்துள்ளது.