தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷி – ஜாமீன் மனுவை நிராகரித்தது பெல்ஜியம் நீதிமன்றம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,300 கோடி மோசடி வழக்கில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷியின் ஜாமீன் கோரிக்கையை பெல்ஜியம் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மும்பையில் தலைமையகமுடைய கீதாஞ்சலி குழுமத்தின் உரிமையாளரான மெகுல் சோக்‌ஷி (66), தனது உறவினர் நீரவ் மோடியுடன் சேர்ந்து வங்கி அதிகாரிகளுடன் கூட்டுச் சதி செய்து ரூ.13,000 கோடி மதிப்பிலான மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பின்னர் இருவரும் வெளிநாடு தப்பிச் சென்றனர். இதனால், நிதி மோசடி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், மெகுல் சோக்‌ஷி தற்போது பெல்ஜியத்தில் வீட்டுக் காவலில் உள்ளார். நீரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த இருவரையும் இந்தியாவுக்கு ஒப்படைக்க வேண்டும் என சிபிஐ கோரிக்கை வைத்துள்ளது. இதனை எதிர்த்து மெகுல் சோக்‌ஷி, பெல்ஜிய கசேஷன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்முறையீடு நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தார்.

ஜாமீன் வழங்கப்பட்டால் மீண்டும் தப்பிச் செல்வார் என்ற சிபிஐ வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மெகுல் சோக்‌ஷியின் மேல்முறையீடு மனுவையும் நிராகரித்தது. இதன் தொடர்ச்சியாக, அவரை இந்தியாவுக்கு ஒப்படைக்கும் விவகாரத்தில் வழக்கு இன்னும் இரண்டு வாரங்களில் பெல்ஜியம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box