அமெரிக்க விவசாயி 4 கிலோ எடையிலான கத்தரிக்காயால் கின்னஸ் உலக சாதனை!

அமெரிக்காவின் பிலடெல்பியா மாநில ஹாரிசன் நகரைச் சேர்ந்த விவசாயி எரிக் குன்ஸ்ட்ராம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டுத் தோட்டத்தில் நட்ட கத்தரிக்காய் செடியிலிருந்து மிகப்பெரிய கத்தரிக்காய் அறுவடை செய்துள்ளார்.

அந்த கத்தரிக்காயின் எடை 3.969 கிலோவாக பதிவாகியுள்ளது. சாதாரண கத்தரிக்காயைவிட 12 மடங்கு அதிகமாக வளர்ந்துள்ள இது, சுமார் ஒரு வீட்டுப் பூனை அளவிற்கு சமமாக உள்ளது.

இந்த செய்தி கின்னஸ் உலக சாதனை அமைப்பிற்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கடந்த ஆகஸ்ட் 19 அன்று அந்நிறுவனத்தின் அதிகாரிகள் நேரில் வந்து கத்தரிக்காயை பரிசோதித்தனர். எடை சரிபார்த்த பின்னர், இது உலகின் மிகப்பெரிய கத்தரிக்காய் என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

முன்னதாக 3.778 கிலோ எடை கொண்ட கத்தரிக்காயே உலகச் சாதனையாக பதிவு செய்யப்பட்டிருந்தது. குன்ஸ்ட்ராம் வளர்த்த கத்தரிக்காய் அந்த சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இதுகுறித்து எரிக் குன்ஸ்ட்ராம் தெரிவித்ததாவது:

“உலகிலேயே மிகப்பெரிய கத்தரிக்காயை வளர்த்ததில் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.

Facebook Comments Box