பனிப்போர் மனநிலையை எதிர்க்க வேண்டும்: எஸ்சிஓ உச்சிமாநாட்டில் சீன அதிபர் உரை

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பனிப்போர் மனநிலை, பிராந்திய மோதல் மற்றும் மிரட்டல் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அவரது உரையில் ஜி ஜின்பிங் அமெரிக்காவின் நடவடிக்கைகளை மறைமுகமாக விமர்சித்து, இரண்டாம் உலகப் போர் சம்பந்தமான சரியான வரலாற்றுப் பார்வையை ஊக்குவிக்க வேண்டும் என்றும், பனிப்போர் மனநிலையையும் பிராந்திய மோதலையும் மிரட்டலையும் தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பின்னணியில், பரஸ்பர வரி விதிப்பு கொள்கையின் பெயரில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளுக்கு கடுமையான இறக்குமதி வரிகளை விதித்தார். குறிப்பாக, இந்தியாவுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்பட்டு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை காரணமாகக் காட்டி மேலும் 25% வரி விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் இந்தியா மற்றும் பிற நாடுகளை மிரட்டும் நோக்கத்துடன் இருந்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. இதை முன்னிட்டு ஜி ஜின்பிங்கின் உரை அவற்றை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், அவர் கூறியது:

  • ஐக்கிய நாடுகள் சபையை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்புகளை பாதுகாக்க வேண்டும்.
  • உலக வர்த்தக மையத்தின் முக்கிய நோக்கத்திற்கு இணங்க, பலதரப்பு வர்த்தக அமைப்பை ஆதரிக்க வேண்டும்.
  • உறுப்பினர் நாடுகள் இணைந்து வெற்றி அடைய வேண்டும்; வேறுபாடுகளை ஒதுக்கி பொதுவான நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
  • வேறுபாடுகளை மதித்து தகவல் தொடர்புகளை பராமரித்து, ஒருமித்த கருத்தை உருவாக்கி ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.

எஸ்சிஓ உறுப்பினர் 26 நாடுகளின் மொத்த பொருளாதார உற்பத்தி சுமார் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உள்ளது. இந்த ஆண்டில் 2 பில்லியன் யுவான் (சுமார் 281 மில்லியன் அமெரிக்க டாலர்) மானியங்கள் வழங்கப்பட உள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் 10 பில்லியன் யுவான் உறுப்பு நாடுகளுக்கு கடனாக வழங்கப்படும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

Facebook Comments Box