ஆக்ஸ்போர்டில் ஜி.யு.போப் கல்லறைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
தமிழ் மொழிக்காக தன்னலமின்றி பணியாற்றிய ஜி.யு.போப்பின் கல்லறைக்கு, ஆக்ஸ்போர்டில் விஜயம் செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பதிவில் அவர் குறிப்பிட்டதாவது:
“ஜி.யு.போப் வெறும் 19-ஆம் வயதிலேயே தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழ்மொழிக்கு ஆழ்ந்த பற்று கொண்டார். திருக்குறள், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை உலகம் அறிய வகையில் மொழிபெயர்த்தார். பின்னர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து தமிழுக்காக பாடுபட்டார்.
ஆக்ஸ்போர்டுக்குச் சென்றபோது, அங்கு அமைந்துள்ள தமிழ் அறிஞரின் கல்லறைக்கு மரியாதை செலுத்தாமல் திரும்புவது ஏற்றதல்ல. எனவே ஜி.யு.போப் கல்லறையில் பணிவுடன் அஞ்சலி செலுத்திய தருணம் இது” என முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்த புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.