“இந்தியாவையும் ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம்” – ட்ரம்ப் விரக்தி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்து, “இந்தியாவையும் ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் நாம் இழந்துவிட்டது போல தெரிகிறது. அவை நாடுகள் எதிர்காலத்தில் வளமாக இருக்கட்டும்” என்று விரக்தியை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில், ரஷ்யாவில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால், அமெரிக்கா இந்தியாவின் மீது மொத்தம் 50 சதவீத இறக்குமதி வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையே உறவில் பிளவு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியுடன் பலமுறை பேச முயன்றதாகவும், ஆனால் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் ட்ரம்ப் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், ஷாங்காய் ஒத்துழைப்பு (SCO) மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் ஒன்றாக நெருக்கமாக உரையாடிய புகைப்படம் வெளியாகி, உலகம் முழுவதும் வைரலானது.

Facebook Comments Box