சார்லி கிக் கொலையாளிக்கு மரண தண்டனை கிடைக்கும்: ட்ரம்ப் நம்பிக்கை
அமெரிக்காவின் ஆளும் குடியரசு கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சார்லி கிக் கொலை செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் நம்புகிறேன் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது குடியரசு கட்சிக்கு தீவிரமாக ஆதரவு வழங்கியவர் சார்லி கிக். கடந்த 10-ம் தேதி யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சார்லி கிக் பங்கேற்றபோது, மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ட்ரம்ப், “சார்லி கிக்கை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நெருக்கமான ஒருவர் தான் கொலை செய்துள்ளார். அவரை குற்றவாளி என்று நம்புகிறேன். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் நம்புகிறேன். சார்லி கிக் சிறந்த நபர். அவருக்கு இவ்வாறு நேர்ந்திருக்கக் கூடாது. அவர் கடுமையாக உழைத்தார். எல்லோரும் அவரை விரும்பினர். அவர் எனது மகனைப் போலவே” என்று தெரிவித்தார்.
முன்னதாக, சார்லி கிக்கின் கொலையை குறித்து ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “சார்லி கிக்கின் படுகொலையை வலுப்படைத்துக் கண்டிக்கிறேன். கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதிர்ஷ்டமாக உயிர் தப்பினேன். இடதுசாரி அரசியல் வன்முறை அதிகரித்து வருகிறது. இந்த வன்முறையால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கின்றனர். இதை தடுப்பது அவசியம். அமெரிக்க நீதிபதிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றனர். வன்முறையில் ஈடுபடும் அனைவருக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்..