“50% வரி விதிப்பு இந்தியாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது” – டொனால்ட் ட்ரம்ப்

இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி பிரச்சினையை உருவாக்கியுள்ளது என்றும், உக்ரைன் பிரச்சினை ஐரோப்பாவின் பிரச்சினை என்றும் அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஃபாக்ஸ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ட்ரம்ப், “உக்ரைன் – ரஷ்யா போரை முடிக்க எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். சமரசம் ஏற்பட வேண்டும் என்றால் இரு தரப்புக்கும் அதில் ஒரே நேரத்தில் ஆர்வம் இருக்க வேண்டும். புதினுக்கு ஆர்வம் இருக்கும்போது ஜெலன்ஸ்கிக்கு இல்லை; ஜெலன்ஸ்கிக்கு இருக்கும்போது புதினுக்கு இல்லை. தற்போது ஜெலன்ஸ்கி போரை முடிக்க விரும்புகிறார், ஆனால் புதின் விரும்பவில்லை. புதினுடன் எனக்கு எப்போதும் சிறந்த உறவு இருந்தது. இது நான் தீர்க்காத ஒரே போர்,” என்று கூறினார்.

போரை முடிப்பதற்காக வங்கிகளுக்கு எதிரான தடைகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கு அதிக வரி விதித்திருப்பதாகவும், ஏழு போர்களை முடித்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “பாகிஸ்தான்-இந்தியா உட்பட பல போர்களை நான் முடித்தேன். சில தீர்க்க முடியாதவை இருந்தாலும், குறிப்பாக காங்கோ-ருவாண்டா மோதலை நான் முடித்தேன். பல லட்சம் மக்கள் கொல்லப்பட்ட போர்களை நான் முடித்தேன்,” என்றார்.

இந்தியாவுடனான உறவைப் பற்றி பேசும் போது ட்ரம்ப் கூறியது: “இந்தியா ரஷ்யாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு நான் 50% வரி விதித்தேன். இது உண்மையில் பெரிய விஷயம். இதனால் இந்தியாவுடன் உறவில் விரிசலை உருவாக்கியது. உக்ரைன்-ரஷ்யா போர் நமது பிரச்சினை அல்ல; இது ஐரோப்பாவின் பிரச்சினை,” என்று தெரிவித்தார்.

Facebook Comments Box