ரஷ்யாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை
ரஷ்யாவின் காம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரை அருகே இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கம் 39.5 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்தது. அதேவேளையில், இந்திய தேசிய நிலஅதிர்வு ஆய்வு மையம் தெரிவித்ததாவது – இன்று காலை 8.07 மணியளவில் (இந்திய நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அது 60 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாகவும் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இருப்பினும், பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.
இதற்கு முன்பு, கடந்த ஜூலை 29ஆம் தேதி இதே பகுதியில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ரஷ்யா, ஜப்பான், ஹவாய் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.