லிபியாவில் இருந்து பணம் பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை
2007 ஆம் ஆண்டு பிரான்ஸ் அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காக லிபியாவின் முன்னாள் அதிபர் மாமர் கடாஃபியிடம் சட்டவிரோதமாக நிதி பெற்றதாக இருந்த வழக்கில், முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2007 தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான சர்கோசி, பிரச்சாரத்திற்காக கடாஃபியிடம் இருந்து நிதி பெற்றதாகவும், அதற்குப் பதிலாக சர்வதேச அரங்கில் பிரான்ஸ் லிபியாவுக்கு ஆதரவாக செயல்படும் என உறுதி அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சர்கோசி, அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். ஆனால், நீதிமன்றம் தேர்தல் பிரச்சார நிதி பெறுதல் சட்டவிரோதம் என நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை அவர் மேல் முறையீடு செய்தாலும், தண்டனை உறுதி என நீதிபதிகள் தெரிவித்தனர். தீர்ப்புக்குப் பிறகு சர்கோசி கூறியதாவது:
“எனக்கு தண்டனை விதித்தவர்கள் விரைவில் நான் சிறையில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் நான் எந்த தவறும் செய்யவில்லை. இறுதி வரை போராடி என் நிர்ப்பாப்பை நிரூபிப்பேன்,” என்றார்.