கனடாவில் மூவர் காலிஸ்தான் தீவிரவாதிகள் கைது
கனடா காவல்துறை காலிஸ்தான் தீவிரவாதிகள் மூவரை கைது செய்துள்ளது. இதில் குர்பத்வந்த் சிங் பன்னுனின் கூட்டாளி இந்தர்ஜித் சிங் கோசல் (36), ஜக்தீப் சிங் (41), அர்மான் சிங் (23) ஆகியோர் அடங்கினர்.
குற்றச்சாட்டுகளில்:
- கவனக்குறைவாக துப்பாக்கியைப் பயன்படுத்தல்
- ஆபத்தான நோக்கத்துக்காக ஆயுதம் வைத்திருத்தல்
- மறைத்து வைக்கப்பட்ட ஆயுதத்தை எடுத்துச் செல்லுதல்
மூவரும் ஒன்டாரியோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை முடிவில் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
காலிஸ்தானி அமைப்பு (Sikhs for Justice) பஞ்சாபை தனி நாடாக உருவாக்க முயற்சி செய்து வருகிறது. குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்காவிலும் கனடாவிலும் அமைப்பின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
இந்தச் சம்பவம் இந்தியா-கனடா இடையேயான பாதுகாப்பு கலந்தாய்வுகளுக்கு பின்னர் நடந்தது. கனடா பாதுகாப்பு ஆலோசகர் நாத்தலி ட்ரூயின், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசிய சில நாட்களுக்குப் பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.