“இந்திய வீரர்கள்தான் ஹைபாவை ஒட்டோமான்களிடமிருந்து விடுவித்தனர்” – இஸ்ரேல் மேயர்
இஸ்ரேலின் ஹைபா நகரில், இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஹைபா நகர மேயர், இந்த நகரை விடுவித்தது பிரிட்டிஷ்காரர்கள் அல்ல, இந்திய வீரர்கள்தான் எனத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
“வரலாற்று சங்கத்திலிருந்து ஒருவர், முழுமையான ஆய்வுகளுடன் எழுதிய புத்தகத்தை எனக்கு வழங்கினார். அதில், ஹைபா நகரை ஒட்டோமான்களிடமிருந்து விடுவித்தது இந்திய படைகள் என்பதை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை, நாங்கள் பிரிட்டிஷ்காரர்கள்தான் இதை செய்தார்கள் என நம்பி வந்தோம். இனி வரலாற்றுப் புத்தகங்களில் இதைத் திருத்தி, உண்மையைப் பதிவு செய்வோம்” என்றார்.
முதலாம் உலகப் போரின் போது, இந்திய குதிரைப்படை வீரர்கள் ஈட்டி, வாள் ஏந்தி கார்மெல் மலைப் பகுதிகளில் இருந்து ஒட்டோமான்களை விரட்டியடித்தனர். இது “வரலாற்றின் கடைசி மிகப்பெரிய குதிரைப்படை நடவடிக்கை” எனப் பார்க்கப்படுகிறது என்று மேயர் யாஹவ் குறிப்பிட்டார்.