அமெரிக்கா, ஜப்பான் விஞ்ஞானிகள் மூவருக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு
மருத்துவத்துக்கான நோபல் பரிசு, நோய் எதிர்ப்புத் தன்மை (immune system) தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ. பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பான் விஞ்ஞானி ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மருத்துவ துறைக்கான பரிசு அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வெற்றி பெற்ற விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது:
- உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் அதன் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஒழுங்குமுறை டி செல்கள் (regulatory T cells).
இந்த கண்டுபிடிப்புகள் புதிய ஆராய்ச்சி துறைக்கு வழிகாட்டியாக, மருத்துவ சிகிச்சைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சைகளில் இதன் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.