ஜப்பானில் நேற்றுமுன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானின் தெற்கு மாகாணத்தில் உள்ள மியாசாகியில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அது 7:1 என்ற அளவில் பதிவானது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இருப்பது குறித்த ஆலோசனையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனவே ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் அதிகாரிகள் அறிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். இது தொடர்பான கடிதம் “எக்ஸ்” இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Discussion about this post