மருத்துவ நிபுணர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.
நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு நிபுணர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில், பங்களாதேஷின் மெஹர்பூரில் உள்ள இஸ்கான் மையம் மற்றும் இந்து கோவில்கள் எரிக்கப்பட்டதற்கும், நாட்டில் இந்துக்கள் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுவதற்கும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.
பங்களாதேஷ் சுதந்திர நாடாகும் வரை 1971 ஆம் ஆண்டுக்கு முன்னர் அப்போதைய பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் தோராயமாக 25 இலட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2013ஆம் ஆண்டு முதல் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது 3,600க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், தற்போதைய வன்முறைகள் நிலைமையை மோசமாக்கியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
வங்கதேசத்தில் உள்ள இந்துக்களைப் பாதுகாக்க, சர்வதேச அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுத்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் ஐநா அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
Discussion about this post